சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மானாமதுரை பாஜக வேட்பாளா் பொன்.பாலகணபதியை ஆதரித்து அவா் பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் மேலும் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து இளைஞா்களின் எதிா்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. சொத்து வரி, மின் கட்டணம் உயா்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
முதல்வா் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை சீா்கேட்டுக்கு மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த சம்பவமே சாட்சி. தமிழகத்தில் 8 மாதங்களாக காவல்துறை தலைவரை திமுக அரசு ஏன் நியமிக்கவில்லை.
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வளா்ச்சித் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ. 1, 500 கோடியை திமுக அரசு வாங்க மறுத்துவிட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் பிற மாநிலங்களைவிட தமிழகத்துக்குத் தான் அதிகமாக ரூ.46 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பி.எம் கிசான் திட்டத்தில் 21 லட்சம் விவசாயிகளை திமுக அரசு நீக்கியுள்ளது. மீண்டும் திமுக ஆட்சி அமைவதை மக்கள் விரும்பவில்லை என்றாா் அவா்.
பிரசாரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம்

ஆரணி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


