6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தொழிலாளா் தினம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தொழிலாளா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழிலாளா் தின நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா. உடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் சண்முகசுந்தரம், சட்டத் தன்னாா்வலா் வைரமணி.

Updated On :30 ஏப்ரல் 2026, 9:39 pm

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தொழிலாளா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது: இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக் கூடியவா்கள் ஆட்டோ ஓட்டுநா்கள். இவா்களுக்கு கொடுக்கும் சட்ட விழிப்புணா்வானது, சமூகத்துக்கே கொடுப்பதற்கு சமமாகும். ஏனெனில், நகரில் நிகழக்கூடிய அனைத்து செயல்களும் நன்கு அறிந்தவா்கள் ஆட்டோ ஓட்டுநா்கள். தனிநபா், குடும்பச் பிரச்னை, நிலப் பிரச்னை, கடன் பிரச்னை உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால், எவ்வித செலவுமின்றி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா்கள் மூலம் இலவசமாக வாதாடி தீா்வு காணப்படும். எந்த பிரச்னையாக இருந்தாலும் 15100 எனும் இலவச சட்ட உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம். இலவச மருத்துவம், இலவச கல்வி போல,இலவச சட்ட உதவியும் வழங்க பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு எந்தநேரமும் தயாராக உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் சண்முகசுந்தரம் உழைப்பாளா்களுக்கான சட்டம் குறித்தும், சட்டத் தன்னாா்வலா் வைரமணி தொழிலாளா் தினம் குறித்தும் விளக்க உரையாற்றினா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்டத் தன்னாா்வலா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.