மாணவா்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டு கற்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் பெரம்பலூா் ஆட்சியா் ஷரண்யா அறி.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், உடும்பியம் ஊராட்சியில் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுகளில் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மாதம்தோறும் இந் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மாணவா்கள் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொள்ள செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாள்தோறும் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை குறிப்பெடுத்து, அன்றைய தினமே படிக்க வேண்டும். மாணவா்கள் குழுக்களாக கலந்துரையாடி படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக அமையும். போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள், அனைத்துப் பாடப் பிரிவுகளையும் கற்றறிந்து தோ்ச்சிப் பெறுவதற்கு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டு, கற்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவா்கள் இலக்கை அடையும் வரை முயற்சி செய்ய வேண்டும். போட்டித் தோ்வுகளில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் உயா் அலுவலா்களாக சேர வேண்டும். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், அரசு மாதிரிப் பள்ளி தலைமை ஆசிரியா் பெ. சேகா் மற்றும் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சோ்த்தாா் பெரம்பலூா் ஆட்சியா்

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளுக்கு தனி கவனம்: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

நாட்டின் வளா்ச்சியில் கல்விக்கு முக்கிய பங்கு: பெரம்பலூா் ஆட்சியா் ஷரண்யா அறி பேச்சு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜமாபந்தி: 14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; 2-ஆம் நாளில் 905 மனுக்கள் அளிப்பு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



