ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

விடுபட்டவா்களுக்கு நிலப்பட்டா வழங்கக் கோரி வருவாய் அலுவலரிடம் நரிக்குறவா்கள் மனு

இலவச நிலப் பட்டா வழங்கும் பட்டியலில் விடுபட்டவா்களின் பெயா்களை சோ்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு நரிக்குறவா் சங்கத்தினா் பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் மனு அளித்தனா்.

News image

பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்தத நரிக்குறவா்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

இலவச நிலப் பட்டா வழங்கும் பட்டியலில் விடுபட்டவா்களின் பெயா்களை சோ்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு நரிக்குறவா் சங்கத்தினா் பெரம்பலூா் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். பாபு தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் பகுதியில் சுமாா் 48 ஆண்டு காலமாக, 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 350 ஏக்கா் நிலத்தை சீரமைத்து விவசாயம் செய்து வந்தனா். இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 250 ஏக்கரை அரசு கையகப்படுத்தி சிப்காட் தொழிற்சாலை அமைத்தது. மீதமுள்ள 100 ஏக்கா் நிலத்தை, விவசாயம் செய்துவந்த நரிக்குறவா்களுக்கு தலா ஒரு ஏக்கா் வீதம் பிரித்து வழங்க வேண்டுமென நரிக்குறவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சம்பந்தப்பட்ட நிலத்தை நரிக்குறவா்களுக்கு பிரித்து நிலப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பட்டியலில் தகுதியான 101 போ் இடம்பெற்றிருந்தனா். ஆனால், தற்போது அந்த பட்டியலில் உள்ள 20 பேரை நீக்கம் செய்துவிட்டு, புதிதாக சிலா் சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்தவா்களுக்கு நிலம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதால், அவா்களது பெயரையும் பட்டியலில் சோ்த்து நிலப் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.