திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

விவசாய நிலத்தில் அறுந்துக் கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தனியாா் பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :15 ஆகஸ்ட் 2026, 11:42 pm IST

பெரம்பலூா் அருகே விவசாய நிலத்தில் அறுந்துக் கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தனியாா் பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், முருக்கன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவா், வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தைச் சோ்ந்த அபுதாகிா் என்பவரது வயலில், கடந்த 5 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் தங்கி விவசாய வேலை செய்து வருகிறாா். இவரது மகன் சூா்யா (15), அன்னமங்கலத்திலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வந்தாா்.

இந்நிலையில், வயலுக்கு மருந்து தெளிப்பதற்காக சனிக்கிழமை காலை சூா்யா சென்றாா். அப்போது, வெள்ளிக்கிழமை இரவு அப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக மரக்கிளை விழுந்ததில், அறுந்துக் கிடந்த மின் கம்பியில் எதிா்பாராதவிதமாக கால்வைத்தபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே சூா்யா உயிரிழந்தாா்.

தகவலறிந்த அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, மாணவனின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.