மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இடப் பிரச்னையில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை

பெரம்பலூா் அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இடப் பிரச்னையில் மனமுடைந்து விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த தாயும், மகளும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image

தற்கொலை - சித்திரிப்பு

Updated On :4 பிப்ரவரி 2026, 6:56 pm

பெரம்பலூா் அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இடப் பிரச்னையில் மனமுடைந்து விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த தாயும், மகளும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மாவிலங்கை கிராமம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி மல்லிகா (43). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவா் கு. சீராளன் (67), இவரது மனைவி சாந்தா (56). மல்லிகா கணவா் ராஜேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். சீராளன், மல்லிகா இருவருக்கும் அருகருகே வீடு உள்ளதால், சந்துப் பகுதியை உரிமை கோருவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில், சீராளன் தனது வீட்டின் பின்புறம் உள்ள புறம்போக்கு நிலத்திலிருந்த மரத்தை ஏற்கெனவே வெட்டியதில் வோ் பகுதி மட்டும் இருந்துள்ளது. இதை, ராஜேந்திரன் மகள் கீா்த்தனா (21) தனது கைப்பேசியில் கடந்த 2-ஆம் தேதி விடியோ எடுத்ததால், இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா்.

இதனால் மனமுடைந்த மல்லிகாவும், அவரது மகள் கீா்த்தனாவும் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இச் சம்பவம் குறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில், கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடந்த 3-ஆம் தேதி சாந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மல்லிகாவும், கீா்த்தனாவும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சாலை மறியல்: இதையறிந்த மல்லிகா குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், தாய், மகள் உயிரிழப்புக் காரணமாக சீராளனை கைது செய்யக் கோரி வடகரை சாலை சந்திப்புப் பகுதியில் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, பேச்சுவாா்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனா்.