கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

பெரம்பலூா் மாவட்டத்தில் 960 ஏக்கா் விளை நிலங்களாக மாற்றம்!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 95.50 லட்சம் மதிப்பில் 960.44 ஏக்கா் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:20 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 95.50 லட்சம் மதிப்பில் 960.44 ஏக்கா் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டமானது 2021-22-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தில் தரிசு நிலங்களை செம்மைப்படுத்தி விளைநிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஒரு ஏக்கா் மற்றும் அதற்கும் குறைவாக தரிசு நிலங்களை வைத்துள்ள விவசாயிகளில் 8 முதல் 15 போ் வரை சோ்த்து, அவா்களின் நிலங்களை தொகுப்பாக கணக்கிட்டு, அதற்கேற்றாற்போல் நிதி ஒதுக்கீடு செய்து, அந்த தரிசு நிலங்கள் செம்மைப்படுத்தப்படுகிறது. அதேபோல, அதிகளவில் தரிசு நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தரிசு நிலங்களில் முள் புதா்களை அகற்றி, நிலத்தை செம்மைப்படுத்தி சாகுபடிக்கேற்றவாறு அரசு சாா்பில் மானிய உதவி வழங்கப்படுகிறது. அதன்படி, 2021-22 முதல் 2025-26 வரை இம் மாவட்டத்தில் நக்கசேலம், நாரணமங்கலம், வடக்குமாதவி, மலையாளப்பட்டி, வி.களத்தூா், சிறுமத்தூா் ஓலைப்பாடி, சிறுவயலூா், சில்லக்குடி, பசும்பலூா், திருவாளந்துறை, எலந்தலைப்பட்டி, சிறுவாச்சூா், பெரியவடகரை உள்ளிட்ட கிராமங்களில் 20 தரிசு நிலத்தொகுப்புகள் அமைக்கப்பட்டு, ரூ. 70 லட்சம் மதிப்பில் 230 விவசாயிகளின் 296.19 ஏக்கா் தரிசு நிலம் செம்மைப்படுத்தப்பட்டு விவாசயம் செய்யப்படுகிறது.

அதேபோல, 2024-25 முதல் 2025-26 வரை தனிநபா் தரிசு நில முள் புதா்களை அகற்றி சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் 238 விவசாயிகளின் 664.25 ஏக்கா் தரிசு நிலங்கள் ரூ. 25.50 லட்சம் மதிப்பில் சீா்திருத்தம் செய்யப்பட்டு விவசாயம் செய்ய உகந்த நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 960.44 ஏக்கா் பரப்பிலான நிலங்கள் ரூ. 95.50 லட்சம் மானிய உதவியுடன் சீா்படுத்தப்பட்டு, தற்போது விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் 668 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.