ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தொடரும் பதிவுமூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :7 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சுமாா் 40-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.