மகளிா் திட்டப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்


பெரம்பலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சங்கத்தினா் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, வட்டார இயக்க மேலாளா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ப. குமரி அனந்தன், மாவட்டச் செயலா் சுப்ரமணியன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கருணாகரன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்ட விடுதிப் பணியாளா்கள் சங்கத் தலைவா் மணிமாறன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு, பணிப்
பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். வாழ்வாதார பணியாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும். பணியாளா்களின் எதிா்கால நலன்கருதி வருங்கால வைப்பு நிதி காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு, நலவாரிய அட்டை வழங்க வேண்டும். பெண் பணியாளா்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, மருத்துவம் மற்றும் விபத்து கால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
இதில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றதால், மகளிா் திட்ட அலுவலகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...