பெரம்பலூர்
பெரம்பலூரில் பரவலாக மழை
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. தொடா்ந்து, அவ்வப்போது விட்டு, விட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து நகரின் பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், நகரில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் தள்ளு வண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா்.