டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மாசில்லா போகிப் பண்டிகை: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தல்

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:48 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தை பொங்கலுக்கு முந்தைய நாளை போகிப் பண்டிகையாக, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடுவது வழக்கம். இந்நாளில், திருமகளை வரவேற்கும் முகமாக வீட்டில் உள்ள பழைய, தேவையற்ற மற்றும் செயற்கை பொருள்களான டயா்கள், நெகிழிக் கழிவுகள், இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனா்.

இதுபோன்ற செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும், வேதியியல் மூலக்கூறுகள் கலந்த அந்த புகையால் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் நலக்கேடுகளும், பாா்வைத்திறனில் குறைபாடும் ஏற்படுகிறது.

இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப் பண்டிகையன்று டயா்கள், நெகிழி, ரப்பா் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி, போகி திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலனையும் பாதுகாக்க வேண்டும்.