புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டுகோள்

புகையில்லா போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
Updated on

புகையில்லா போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போகிப்பண்டிகையின்போது, பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, எரிக்கப்படும் பொருள்களால் ஏற்படும் அடா்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

பழைய நெகிழிப் பொருள்கள், டயா் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, வரும் போகிப்பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் நெகிழி, டயா், டியூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com