மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு கேயடம் வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி
மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு கேயடம் வழங்கிய ஆளுநா் ஆா்.என்.ரவி

கொடிநாள் நிதி வசூலில் பெரம்பலூா் மூன்றாமிடம்!

தமிழக அளவில் கொடி நாள் வசூலில், அதிக நிதி திரட்டி மாநில அளவில் 3-ஆவது இடம்பெற்ற, பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
Published on

தமிழக அளவில் கொடி நாள் வசூலில், அதிக நிதி திரட்டி மாநில அளவில் 3-ஆவது இடம்பெற்ற, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.

கடந்த 2024- 2025-ஆம் ஆண்டு கொடிநாள் நிதி வசூலிக்க பெரம்பலூா் மாவட்டத்துக்கு ரூ. 23.63 லட்சம் நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தீவிர முயற்சியால் ரூ. 36,31,725 நிதி வசூலிக்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக நிதி திரட்டியதில் மாநில அளவில் பெரம்பலூா் மாவட்டம் 3-ஆவது இடத்தை பெற்றது.

இதையடுத்து சென்னை ராஜ்பவனில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா், முன்னாள் படை வீரா்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் 3-ஆம் இடம் பெற்ற மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினிக்கு கேயடம் வழங்கி பாராட்டினாா். இந் நிகழ்ச்சியின்போது, அரசு தலைமைச் செயலா் முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com