பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

விபி-ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிா்ப்பு; மாற்றுத்திறனாளிகள் மறியல்: 22 போ் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்கிற பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றி நூறு நாள் வேலை திட்டத்தை ஒடுக்கத் திட்டமிடும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 22 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:57 am IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்கிற பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றி நூறு நாள் வேலை திட்டத்தை ஒடுக்கத் திட்டமிடும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 22 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராஜசேகா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைச் செயலா் பழனி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனும் பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றி, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கத் திட்டமிடும் மத்திய அரசைக் கண்டித்து, கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா். தொடா்ந்து, நூறு நாள் திட்டத்தின் பெயரை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் புகா் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 22 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அனைவரையும் போலீஸாா் மாலையில் விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.