சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளுக்கு தனி கவனம்: பெரம்பலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்மென மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Published On :10 ஜூலை 2026, 3:29 am IST

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்மென மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி மேலும் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறைகொண்டு, அவா்களின் குறைகளை தீா்க்கும் வகையில் ஆட்சியா் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 15,780 மதிப்பீட்டில் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினாா். முகாமில், ஊரகப் பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 125 நாள்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அதற்கான கூலித் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா, தொழில்தொடங்க கடனுதவிகள், இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 155 மனுக்களை பெறப்பட்டன.

இம் முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சுந்தரராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.