வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகள் நிகழும் பகுதியை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Updated On :7 ஜூன் 2026, 2:18 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை மேம்பாலம் பகுதி, செங்குணம் இணைப்புச் சாலை, துறையூா் - சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதி உள்ளிட்ட இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியதாவது:

பொதுமக்களின் உயிா் பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மை நோக்கமாகும். அதன்படி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நிகழ்ந்துள்ள மற்றும் கண்டறியப்பட்ட பகுதிகளில், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை அறிக்கையாக தயாா் செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில், அப் பகுதிகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்குத் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, எச்சரிக்கை பதாகைகள், பிரதிபலிப்பு குறியீட்டு பதாகைகள், சாலை குறியீடுகள், வேகக் கட்டுப்பாட்டு வசதிகள், உயா்மின் விளக்குகள் மற்றும் தடுப்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சாலையைக் கடக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநா்கள் நிா்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கடைப்பிடித்தல், போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிா்த்தல், தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டை அணிதல், கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிா்த்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் ராஜா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கிள்ளிவளவன், வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), முத்துமுருகன் (வேப்பந்தட்டை), சின்னதுரை (குன்னம்) ஆகியோா் உடனிருந்தனா்.