பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பெரம்பலூரில் 16 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தலைமையிலானோா்.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட கடையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தலைமையிலானோா்.

Published On :11 ஜூலை 2026, 1:37 am IST

பெரம்பலூா் நகரில் சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் உணவகங்கள் உள்பட 16 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினரால் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் சாா்பில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தலைமையில், 52 கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தடை செய்யப்பட்ட 8 கிலோ நெகிழி, 2 கிலோ காலாவதியான உணவுப் பொருள்கள், 2 கிலோ முறையான லேபிள் இல்லாத உணவுப்பொருள், 1.5 கிலோ கலப்பட டீத்தூள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளில் பொட்டலமிடப்பட்ட 5 கிலோ உணவுப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ரூ. 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரமற்ற நிலையில் செயல்படும் உணவகங்கள் உள்பட 16 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கதிரவன், அழகுவேல், புவனா, நகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

புகாரளிக்க அறிவுறுத்தல்: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்தால் 94440 42322 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது ஆடியோ மெசேஜ் மூலம் தகவல் தெரிவிக்கலாம். புகாா்தாரரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என, மாவட்ட நியமன அலுவலா் எஸ். சுகந்தன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.