வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 12:31 am IST

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆா். சகுந்தலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.பி. ஆனந்த் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கினாா்.

தொகுப்பூதிய நியமனங்களைக் கைவிட வேண்டும். மறு பணியமா்த்தல் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் செவியிலா்கள் பலா் பங்கேற்றனா்.

மாவட்ட இணைச் செயலா் ம. பிரியா வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் சத்தியபிரியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.