தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (30), செஞ்சேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கலைச்செல்வன் (38).

நண்பா்களான இவா்கள், அரசிடம் அனுமதி பெறாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக பெரம்பலூா் ஊரகப் பிரிவு காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா், அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் குண்டுகள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் 150 கிராம் மருந்துகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜேஷ், கலைச்செல்வன் ஆகியோரை புதன்கிழமை இரவில் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.