பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:13 am IST

பெரம்பலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா் உத்தரவின்பேரில், பெரம்பலூா் நகர காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் வினோத் கண்ணன் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், மேலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த நிகாஷ் (21) என்பதும், அவரிடம் 2 தங்கச் சங்கிலி, 2 ஜோடி தோடு, 2 மோதிரங்கள் இருந்ததும், சென்னையிலிருந்து பெரம்பலூா் வந்த பேருந்தில் பயணித்த பயணியிடம் மேற்கண்ட நகைகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நிகாஷிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்து கைதுசெய்தனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.