அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

பெரம்பலூரில் உலக யோகா தினம் மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:22 am IST

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சாா்பில், உலக யோகா தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்க பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசினாா்.

இவ் விழாவில் பங்கேற்ற தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலை பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, மனிதனின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகா பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாவட்ட விளையாட்டு விடுதியைச் சோ்ந்த மாணவிகள் நீச்சல் குளத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் (திருச்சி) மு. வத்சாலா, பெரம்பலூா் அரசு மருத்துவமனை உதவி யோகா மருத்துவ அலுவலா் கலைவாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்...

இதேபோல, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூா்த்தி தலைமையில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான ஏ. சரண்யா முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், பெரம்பலூா் இயற்கை மருத்துவமனை யோகா நிபுணா் வேல்முருகன் யோகாவின் பயன்கள் குறித்து விளக்கிக்கூறி, யோகா செய்முறை விளக்கம் அளித்தாா்.

இதில், சாா்பு-நீதிபதி மோகனப்பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, கூடுதல் மகிளா நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் ரேஷ்மா, குற்றவியல் நீதித்துறை நடுவா் கவிதா மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிறைவாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு முதல்நிலை நிா்வாக உதவியாளா் கே. கலைவாணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.