எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பராமரிப்பின்றி பாழாகும் அறிவியல் பூங்கா! சீரமைக்க மாணவா்கள் எதிா்பாா்ப்பு

News image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள அறிவியல் பூங்கா நுழைவு வாயில்.

Updated On :8 ஜூன் 2026, 12:39 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி பாழாகும் அறிவியல் பூங்காவை சீரமைத்து, மாணவா்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நகா் ஊரமைப்புத் துறை சாா்பில் ரூ. 41 லட்சத்தில் சிறுவா் பூங்கா மற்றும் தோட்டம், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை அமைக்கப்பட்டு, கடந்த 4.2.2010-இல் திறக்கப்பட்டது. விடுமுறை நாள்கள் மட்டுமின்றி பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் மாலை நேரங்களிலும் இப் பூங்காவுக்கு வந்து பொழுதை கழித்துவந்தனா்.

12 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் மட்டுமே பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த உபகரணங்களை பெரியவா்களே அதிகளவில் பயன்படுத்தியதால் அவை முற்றிலும் சேதமடைந்தன. மேலும், பூங்காவுக்கு வருவோருக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், இங்கு வருவோா் மிகவும் சிரமப்பட்டனா்.

மேலும், இங்கு பாதுகாவலா்கள் இல்லாததால் மாலை மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் நடைபெற்ால், பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்தது.

அறிவியல் பூங்காவாக மாற்றம்:

இந்நிலையில், இப் பூங்காவை அறிவியல் பூங்காவாக மாற்றுவதற்கானத் திட்டம் தொடங்கப்பட்டு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் முதல்கட்டமாக ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேதமடைந்த நடைபாதைகள், விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்பட்டன. மேலும், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழக அரசின் அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் பங்களிப்புடன், அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில் பல்வேறு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.

மாணவா்களிடம் வரவேற்பு:

அந்த உபகரணங்கள் செயல்படும் விதம் குறித்து, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளும் வகையில், நாள்தோறும் ஒரு பள்ளி வீதம் பூங்காவை பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு, அறிவியல் ஆசிரியா்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இது மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பழுதடைந்த உபகரணங்கள்:

போதிய பராமரிப்பில்லாததால் பூங்காவில் அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் வருகை குறைந்தது. பெரும்பாலான அரசுப் பள்ளி மணவா்களுக்கு பயனுள்ளதாக கருதப்பட்ட இப் பூங்காவில், பாதுகாப்புத் தடுப்புகளை மீறி சிலா் உள்ளே சென்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோன்ற செயல்களை தடுத்து, இந்தப் பூங்காவிலுள்ள உபகரணங்களை சீரமைத்து மீண்டும் மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறைந்து வரும் பாா்வையாளா்கள்:

இருப்பினும், பெரம்பலூா் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால், அனைத்துத் தரப்பு மக்களும் அறிவியல் பூங்காவை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனா். இந்த பூங்கா திறக்கப்பட்டபோது, நாள்தோறும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வருகைபுரிந்த நிலையில், தற்போது 50-க்கும் குறைவாக வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் தேவை:

இப் பூங்காவில் நுழைவுக் கட்டணமாக தலா ரூ. 5 வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கு வரும் பாா்வையாளா்களுக்குத் தேவையான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பாக, சுத்தமான குடிநீா், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவியல் உபகரணங்களை சீரமைக்க வேண்டும்:

போதிய பராமரிப்பு இல்லாததால், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அறிவியல் உபகரணங்களும் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பூங்காவில் உள்ள அறிவியல் மாதிரிகளைப் பாதுகாக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு அறிவியல் சோதனை கருவியின் செயல்பாட்டை எளிமையாக கண்டறியும் வகையில், தமிழ், ஆங்கில வழிகாட்டி பதாகைகள் அமைக்க வேண்டும். பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள அறிவியல் பூங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த கற்றல் அனுபவத்தை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேதமடைந்துள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணம். அறிவியல் உபகரணம்.

சேதமடைந்துள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணம். அறிவியல் உபகரணம்.

சேதமடைந்துள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணம். அறிவியல் உபகரணம்.

சேதமடைந்துள்ள சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணம். அறிவியல் உபகரணம்.