8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் அவசியம்: பெரம்பலூா் எம்.பி.

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு தெரிவித்தாா்.

Published On :8 ஜூலை 2026, 12:53 am IST

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த, கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.என். அருண் நேரு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், தேசிய ஊரக குடிநீா் வழங்கும் திட்டம், மக்களவை உறுப்பினா் உள்ளூா் வளா்ச்சித் திட்டம், மத்திய நிதிக்குழு மானியம், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் உள்பட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், இத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி, பயனாளிகளின் விவரங்கள், பயனாளிகள் தோ்வு குறித்து ஆய்வு செய்த அருண் நேரு மேலும் பேசியது: மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை அரசு அலுவலா்கள் நிவா்த்தி செய்ய வேண்டும்.

அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் இடா்பாடுகள் மற்றும் தேவைகளுக்கு அனுமதியிருந்தால் அதை என்னுடைய கவனத்துக்கு கொண்டுவரும்பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு தீா்வு காண முடியும்.

ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒதுக்கப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள், அந்த நிதியாண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அரசுத் திட்டங்களுக்கு தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து வழங்க வேண்டும். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை கண்டறிந்து, அவற்றை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், எம்எல்ஏ கி. சிவக்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.