பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா் 2026 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆக. 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
விருதானது, 15 முதல் 35 வயது வரையுள்ள தலா 3 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த 1.4.2025 முதல் 31.3.2026 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியவராகவும், அவ்வாறு மேற்கொண்ட தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
எனவே, இம் மாவட்டத்தில் உள்ள தகுதியான நபா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் மட்டுமே ஜூலை 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தை 04328-299266 அல்லது 7401703516 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலமைச்சா் கோப்பை போட்டிகள் இணையவழி முன்பதிவு தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



