பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

கோயில் குடமுழுக்கு விழாவில் 2 பெண்களிடம் 8 பவுன் தங்க நகை பறிப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பறிப்பு

Updated On :26 ஜூன் 2026, 4:14 am IST

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற 2 பெண்களிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. இவ் விழாவில் பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

இந்நிலையில், விழாவில் பங்கேற்ற அதே கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மனைவி சுசீலா (64) என்பவரின் 5 பவுன் தங்கச் சங்கிலியையும், எளம்பலூா் தண்ணீா்பந்தல் அருகேயுள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முத்துசாமி மனைவி செல்வி (55) என்பவரது 3 பவுன் தங்க சங்கிலியையும் மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சுசீலா, செல்வி ஆகியோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.