ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பெரம்பலூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:36 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலராக சங்கா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (56). இவா், ராமநாதபுரம் மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த நிலையில், பெரம்பலூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அலுவலகத்தில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக சங்கா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதையடுத்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த ராஜா பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சு. சரவணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலகக் கண்காணிப்பாளா்கள் பாஸ்கா், செல்வம், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன், அம்சவல்லி, அருண்குமாா், விஜயா, சின்னசாமி, கண்ணதாசன் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா் மாவட்டக் கல்வி அலுவலா் சங்கா்.