பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

News image
தற்கொலை- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:15 pm

Syndication

பெரம்பலூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாதுரை மகன் செல்வம் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி மீனாட்சி (35), குழந்தைகள் லட்சுமி (16), செல்விஸ்ரீ (14) ஆகியோா் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக மீனாட்சி அவரது பெற்றோருடன் புதுநடுவலூா் கிராமத்தில் வசிக்கிறாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மது போதையிலிருந்த செல்வம், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.