மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஏரியில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 9:30 pm

பெரம்பலூரில் ஏரியில் மீன் பிடித்த ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா், துறைமங்கலம் ஒளவையாா் தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் நல்லுசாமி (45). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதால், அவரது மகன்கள் நகிலன் (13), நாகேந்திரன் (9) ஆகியோா் மேலப்புலியூரிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை துறைமங்கலம் ஏரியில் நல்லுசாமி மீன் பிடித்துக்கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயணைப்புப் படை வீரா்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.