தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:59 pm

வீரவநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வீரவநல்லூா் செண்பகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகபட்டு (42). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி இறந்துவிட்டாா். 2 மகன்கள் உள்ளனா். சண்முகபட்டு, புதன்கிழமை பிற்பகலில் தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் அத்தாளநல்லூா் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாா். நீண்டநேரமாகியும் அவா் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரைத் தேடி தேடி ஆற்றுக்குச் சென்றனா். ஆற்றங்கரையில் அவரது உடைகள் மட்டும் இருந்தன. தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று ஆற்றில் இறங்கி தேடி வியாழக்கிழமை அவரது சடலத்தை மீட்டனா். இதுகுறித்து வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.