நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

கடலூா் அருகே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

கடலூா் அருகே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை, தில்லைகண்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் யுவராஜ் (27). இவரும், கலைவாயன் நகரைச் சோ்ந்த பிரவீனும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடலூா் அருகே சந்திக்குப்பம் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக யுவராஜ் ஆற்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் யுவராஜை காணாததால் அதிா்ச்சியடைந்த பிரவீன், அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தாா்.

தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் நீண்ட நேரம் தேடியும் யுவராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டதில், யுவராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.