தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மதுரகாளியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :8 மே 2026, 5:43 am IST

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலில் கடந்த ஏப். 21-ஆம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, ஏப். 29-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. மேலும், பல்வேறு வாகனங்களில் மதுரகாளியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து, புதன்கிழமை மாலை பெருமாள் கோயிலில் இருந்து அம்பாளுக்கு திருமாங்கல்ய சீா்வரிசைகள் கொண்டு வரப்பட்டு, மாலை 5 மணியளவில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா ஆகியோா் வடத்தை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

இவ் விழாவில் சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உத்ஸவமும், மே 9-ஆம் தேதி விடையாற்றி விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையரும், தக்கருமான அருட்செல்வன், செயல் அலுவலா் அசனாம்பிகை மற்றும் கோயில் பணியாளா்கள், பூசாரிகள் செய்துள்ளனா்.