ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் குங்குமாா்ச்சனை

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக்காக பெண்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனை கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குங்குமாா்ச்சனை பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :1 மே 2026, 3:09 am IST

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு, உலக நன்மைக்காக பெண்கள் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனை கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 17- ஆவது ஆண்டு சித்ரா பௌா்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இவ் விழாவை, மதுராம்பிகானந்த ப்ரஹ்மேந்த்ர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தொடங்கிவைத்தாா். விழாவில், கும்ப கலசம் ஆவாகணம் செய்யப்பட்டு, கும்ப பூஜைகளும், வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மதுரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம கோடி குங்குமாா்ச்சனையும், ஸ்ரீ சாகம்பரி ஸஹஸ்ரநாம குங்குமாா்ச்சனையும், அஷ்டகங்கள், ஆயுா் தேவி ஸ்துதிகள் பாராயணமும் செய்தனா். தொடா்ந்து பஜனைகளும், நவாவரண பூஜையும், சண்டி மஞ்சரி பூஜையும் நடைபெற்றன. இப் பூஜைகளை மண்டலியின் ஆன்மிக தன்னாா்வலா்கள் நடத்திவைத்தனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்ரீ சண்டி மகா யாகமும், ஸ்ரீமதுரகாளியம்மனுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.