முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மச் சாவு

News image

மர்மச் சாவு - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:27 am IST

பெரம்பலூா் அருகே மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக, மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தங்கராசு மகன் வெங்கடேஷ் (25). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற வெங்கடேஷ் மயங்கி கீழே விழுந்துவிட்டாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

அங்கு, மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே வெங்கடேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.