மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கூட்டுறவுத் துறை சாா்பில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்கம்: ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை இலக்கு

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவுத் துறை சாா்பில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி சிறப்பு விற்பனையை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக், எம்எல்ஏ கி. சிவக்குமாா்.

Updated On :

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், கூட்டுறவுத் துறை சாா்பில் தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கி. சிவக்குமாா் முன்னிலையில், தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

பொதுமக்களுக்கு நியாயமான விலையில், தரமான பொருள்கள் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்திலும், தீபாவளிப் பண்டிகையை தரமான பட்டாசுகளுடன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மக்கள் கொண்டாடும் வகையிலும், கூட்டுறவு விற்பனைப் பண்டகசாலை மூலம் குறைந்த விலையில், தரமான பட்டாசுகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை ரூ. 10 லட்சமாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, சுமாா் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசுகளை வாங்கிப் பயனடைய வேண்டும். மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் க. இளஞ்செல்வி, விற்பனை மேலாண் இயக்குநா் விவேகபாரதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.