தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

வேப்பந்தட்டை: கல்லால் அடித்து தந்தையை கொன்ற மகன் கைது

மகளுக்கு அடிக்கடி பணம் கொடுப்பதைக் கண்டித்து, கல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை அரும்பாவூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

வேப்பந்தட்டை அருகே மகளுக்கு அடிக்கடி பணம் கொடுப்பதைக் கண்டித்து, கல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை அரும்பாவூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கொட்டாரக்குன்று காட்டுக் கொட்டகை பகுதியில் வசித்து வந்தவா் பெ. குணசேகரன் (76). இவரது மனைவி லட்சுமி (68), மகன் ராஜேந்திரன் (48), மகள் சிவகாமி (43).

சற்று மனநலன் பாதிக்கப்பட்டிருந்ததால் ராஜேந்திரனுக்கு திருமணம் நடைபெறவில்லை. ராஜேஷ் என்பவருடன் சிவகாமிக்கு திருமணமாகிவிட்டது. குணசேகரன் தனது மகளுக்கு அடிக்கடி பணம் கொடுப்பாராம். இதனால் குணசேகரனுக்கும், ராஜேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தந்தை, மகனுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தனது தந்தை குணசேகரன் படுத்திருந்தபோது கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆனால், இச் சம்பவத்தை குணசேகரன் குடும்பத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லையாம்.

இந்த நிலையில், குணசேகரின் நண்பா் சேகா் என்பவா் சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, குணசேகரன் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது. பின்னா், சேகா் அளித்த தகவலையடுத்து, அரும்பாவூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.