கல்குவாரிகளால் பாதிக்கப்படும் விளை நிலங்களை காக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கும் கல் குவாரிகளால் பாதிப்புக்குள்ளாகும் விளை நிலங்களைப் பாதுகாக்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கும் கல் குவாரிகளால் பாதிப்புக்குள்ளாகும் விளை நிலங்களைப் பாதுகாக்க, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பேசியது:
புதிதாக அமைக்கப்படும் மின் கம்பங்களை நீா்நிலையற்ற இடங்களில் அமைக்க வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கத்திலிருந்து செல்லும் கிளை வாய்க்கால்களை விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஏரிக்கரை, அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் இலுப்பை, நாவல் உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும். உற்பத்திச் செலவின் அடிப்படையில் விவசாய விளைப்பொருள்களுக்கு விலை நிா்ணயிக்க வேண்டும். சேதமடைந்து வரும் கொட்டரை நீா்த்தேக்க கரைகளை சீரமைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வேப்பந்தட்டை உயா்நிலைப்பள்ளி அருகேயுள்ள சாலையை சீரமைக்க வேண்டும். கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இம் மாவட்டத்தில் இயங்கும் குவாரிகளால் பாதிப்புக்குள்ளாகும் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும். ஏரி, குளங்களை தூா்வாரி சீரமைத்து மழை நீரைச் சேமிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியத்தில் விதைக்கடலை வழங்க வேண்டும். இரூரில் பேருந்து நிறுத்தம் அமைத்து, அவ் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னமுட்லு அணையை மறு ஆய்வு செய்து, அத் திட்டத்தை செயல்படுத்தி, வேப்பந்தட்டை வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும், கோடைக்காலங்களில் விவசாயிகள் மற்றும் வன விலங்குகள் பயன்பெறும் வகையில், கூடுதலாக தடுப்பணைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக் பேசியது:
மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். உலா்களம் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம். வேளாண் இயந்திரங்கள் தேவைப்படுவோா் உழவன் செயலி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் சின்ன வெங்காய கொட்டகைக்கான மானியம் விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ராமசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி..
இரு சங்கத்தினரிடையே வாக்குவாதம்: கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன், கரும்பு விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு எங்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அரசுக்கு ஆதரவான விவசாயிகள் சங்கத்தினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினாா்.
இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் உள்பட பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்து, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த சங்க நிா்வாகி, உள்ளூா் மாவட்ட விவசாயிகளை அவமதிப்பதை ஏற்கமுடியாது எனக் கூறினா். இதனால், இரு தரப்பு விவசாயிகளுக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண் துறையினா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனா். இதனால், கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

