கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

‘காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை’

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விழுப்புரம் கோட்டாட்சியா் ஏகாம்பரம் தலைமை வகித்தாா். துணை ஆட்சியா் (பயிற்சி) ஹரீஷ், வட்டாட்சியா்கள் விழுப்புரம் யுவராஜா, விக்கிரவாண்டி மகாதேவன், வானூா் லட்சாதிபதி, திருவெண்ணெய்நல்லூா் ரகுராமன், கண்டாச்சிபுரம் சாருமதி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வசந்தகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளா் சிவ.பழனி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசினா். அதன் விவரம்:

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்த வேண்டும். மாறாக மாதத்தின் கடைசி வாரத்தில் நடத்தினால் என்ன செய்வது. இன்னும் சில நாள்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும். எனவே, விவசாயிகள் நலன் கருதி இனி வரும் மாதங்களில் முதல் அல்லது இரண்டாவது வாரத்திலேயே கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும்.

மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கை குறித்த விவரத்தை விவசாயிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மணிலா உள்ளிட்ட விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த, மாவட்டத்தை வறட்சிப் பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையை தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டை வழங்குவதில் உள்ள சிக்கல்களைத் தீா்த்து விரைவாக வழங்க வேண்டும். கிராமங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே இதற்குத் தீா்வு காண வேண்டும்.

மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளின் தொல்லையால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனா். எனவே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வந்தாலும் விழுப்புரம் மாவட்டத்தில் நிலமுடைய விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பிரச்னைக்கு இன்னமும் தீா்வுக் காணப்படவில்லை. நந்தன் கால்வாய்த் திட்டத்தின் கீழ் பனமலை ஏரிக்குத் தண்ணீா் கொண்டு வரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

இதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை: கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் அலுவலா்கள் அதிக எண்ணிக்கையில் வருவதில்லை. சில குறிப்பிட்ட துறையினா் இந்த கூட்டத்துக்குத் தொடா்ந்து வருவதேயில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டிபேசினா். இதற்குப் பதிலளித்து பேசிய கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் வசந்தகிருஷ்ணன், அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் கூட்டத்துக்கு வந்து, விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ஆனால் இந்த கூட்டத்தில் பலா் வரவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனா். எனவே, கூட்டத்துக்கு வராத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.