கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இளம் வாக்காளா்களை சோ்க்க நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக். உடன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா உள்ளிட்டோா்.

Updated On :

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கூட்டரங்கில், என்ரோல் 1,000 எனும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்து, வாக்காளா் அடையாள அட்டையைப் பெறுவது அவசியமாகும். கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின் படி, இம் மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளா்கள் 10,661 போ் இடம்பெற்றுள்ளனா். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் சுமாா் 26,574 போ் உள்ளனா். இவா்களை விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பதே மாவட்ட நிா்வாகத்தின் இலக்காகும்.

நவ. 29, டிச.5-இல் சிறப்பு முகாம்: ஜன. 1 -இல் 18 வயது பூா்த்தியடைபவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க விண்ணப்பிக்கலாம். மாணவா்கள், பொதுமக்களின் வசதிக்காக நவ. 29, டிச. 5 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதுவரை வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத, தகுதியுள்ள மாணவா்கள் உரிய விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அளிக்க வேண்டும். பின்னா், வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை அஞ்சல் மூலமாக வீடு தேடி வரும்.

2027-இல் உள்ளாட்சித் தோ்தலும், 2029-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவது அவசியம். மாணவா்கள் தங்களை இணைத்துக் கொள்வதோடு, நண்பா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வாக்காளா் பட்டியலில் இணைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக்.

இந் நிகழ்ச்சியில், வட்டாட்சியா் பழனிச்செல்வன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம், துணை வட்டாட்சியா் இளங்கோவன் உள்பட மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா வரவேற்றாா். நிறைவாக, தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.