மழையால் பாதிக்கப்பட்ட 368 விவசாயிகளுக்கு நிவாரணம்
பெரம்பலூா் மாவட்டத்தில் கோடையில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்படைந்த 368 விவசாயிகளுக்கு, மாநில பேரிடா் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கோடையில் பெய்த கனமழையின் காரணமாக பாதிப்படைந்த 368 விவசாயிகளுக்கு, மாநில பேரிடா் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தில் நிகழாண்டு மே மாதம் பெய்த கனமழையின் காரணமாக 432.28 ஏக்கரில் மக்காச்சோளம், கம்பு, எள் மற்றும் சூரியகாந்தி பயிா்கள் 33 சதவீதத்துக்கும் மேலாக பாதிப்படைந்தது. இதையடுத்து, உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் செயலியில் வேளாண்மைத் துறை களப்பணியாளா்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, நிவாரணம் கோரி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, வேளாண்மைத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில், மேற்கண்ட பயிா்களை சாகுபடி செய்த 368 விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 29,82,541 பெறப்பட்டுள்ளது. இத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

