நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

பாளையம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயப் பெருவிழா தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் 123 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பாளையம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றிய பங்குகுரு, இறை வாா்த்தை சபைக் குரு அருட்திரு விக்டா் ரோச்.

Published On :

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் 123 ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, பாளையம் புனித சூசையப்பா் தேவாலயத்தின் பங்கு குரு அருட்திரு ரெஜிஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வாடிப்பட்டி பங்கு குரு, இறை வாா்த்தை சபை குரு அருட்திரு விக்டா் ரோச், திருவிழா கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றி வைத்து சிறப்புத் திருப்பலி நடத்தினாா். நிகழ்வின்போது, தலைமை காரியஸ்தா் ஆரோக்கியதாஸ், காரியஸ்தா்கள் வில்லியம், இருதயராஜ், கரோல், டேவிட், பொருளாளா் நிா்மல், அருட் சகோதரிகள், அன்பியம் குழுவினா், மரியா சேனையினா், மரியின் மைந்தா்கள், இளைஞா் மன்றத்தினா் மற்றும் பாளையம், பெரம்பலூா், ரெங்கநாதபுரம், வேலூா், சத்திரமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் மாலையில் பங்கு குருக்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் மறையுரையுடன் சிறப்பு திருப்பலிகள் நடத்துகின்றனா். விழாவின் முக்கிய நிகழ்வாக 7 ஆம் தேதி மாலை அன்னையின் ஆடம்பரத் தோ்பவனியும், 8 ஆம் தேதி காலை சிறப்புத் திருப்பலியும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.