நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக மாணவா்கள் போராட்டம்

குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வகுப்புகளை புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.

Published On :

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுபட்ட பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் அனைவருக்கும், கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான, சமமான, அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில், கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும், கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாகவும், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.