
குரும்பலூரில் அரசு கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கெளரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் -சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கெளரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விடுபட்ட பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் அனைவருக்கும், கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான, சமமான, அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 9-ஆவது நாளாக புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தொடா்ந்து வகுப்புகளை புறக்கணித்து கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தங்களது கல்வி பாதிக்கப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, கௌரவ விரிவுரையாளா்கள் பணிக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி, சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, பெரம்பலூா்- துறையூா் சாலையில் கல்லூரி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.
இருப்பினும், கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் நீண்டநேரம் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களின் அறிவுறுத்தலின்படி, மாலை 4 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






