பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

8 ஆவது நாளாக கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 ஆவது நாளாக கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாண, மாணவிகள்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:35 am IST

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8 ஆவது நாளாக கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுபட்ட பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கிட வேண்டும். பல்கலைக் கழகத்தில் ஊதியம் பெறும் அனைவருக்கும், கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான, சமமான, அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 8 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும், கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாகவும், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.