நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

டாஸ்மாக் மதுக்கடை முன்பு 2 ஆவது நாளாக போராட்டம்

அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 2 ஆவது நாளாக அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூடு டாஸ்மாக் மதுக்கடை முன்பு 2 ஆவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

குமரி மாவட்டம், அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 2 ஆவது நாளாக அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடும் படி அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்திய நிலையில் துறை அலுவலா்கள் கடை மூடப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தனா். ஆனால் உத்தரவாதம் அளித்தபடி கடை மூடப்படவில்லை. இந்த நிலையில் கடையை மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் முடிவு எதுவும் ஏற்படாத நிலையில் போராட்டம் 2 ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.