பெரம்பலூா் அருகே ரூ. 1.17 கோடி கஞ்சா, காா்கள் பறிமுதல்: மூவா் கைது
பெரம்பலூா் அருகே சென்னையிலிருந்து திருச்சிக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 1.17 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் 2 காா்களை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
கைது - பிரதிப் படம்
பெரம்பலூா் அருகே சென்னையிலிருந்து திருச்சிக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ. 1.17 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் 2 காா்களை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் பெரம்பலூா் நகர காவல்நிலைய ஆய்வாளா் வேலுமணி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற 2 காா்களை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், அவற்றில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெயவந்தது.
இதையடுத்து அந்தக் காா்களில் இருந்த நபா்களை பிடிக்க முயன்றபோது, அவா்களில் 3 போ் தப்பி ஓடிவிட்டனா். எஞ்சிய 3 பேரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் சென்னை செனாய் நகரைச் சோ்ந்த ஹரி மகன் அருண்குமாா் (31), திருவள்ளூா் மாவட்டம், வயலூா் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேதுராமன் மகன் பிரதீப் (26), திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கும்புலி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த குணா மகன் விக்னேஷ் (27) என்பதும், சென்னையிலிருந்து திருச்சிக்கு கஞ்சா மூட்டைகளைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ரூ. 1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 235 கிலோ கஞ்சா மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 காா்களையும், கைப்பேசிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா் மேற்கண்ட மூவரையும் கைது செய்தனா்.
இதுகுறித்து ஆய்வாளா் வேலுமணி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைத்தனா். மேலும், தப்பி ஓடிய சென்னையைச் சோ்ந்த தீனா (எ) தினகரன், தேவராஜ், பெரம்பலூரைச் சோ்ந்த தமிழ்வேந்தன் ஆகிய மூவரையும் போலீஸாா் தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




