கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் முதியவா் கைது

பெரம்பலூரில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்ட முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது

Published On :

பெரம்பலூரில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்ட முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மா்ம நபரால் கடந்த 13-ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த விடியோ காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த கி. லோகநாதன் (62) என்பவா், இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட லோகநாதன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.