13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் உள்பட இருவா் கைது!
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற முதியவா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புத்தூா் திரௌபதி அம்மன் கோயில் வீதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் தலைமையிலான போலீஸா், வியாழக்கிழமை மாலையில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனா். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்ற காந்தி மாா்க்கெட் வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த த. தியாகராஜன் (70), உறையூா் நவாப் தோட்டத்தைச் சோ்ந்த க. மணிகுமாா் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து 13 கிலோ புகையிலைப் பொருள்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




