கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

நீதிமன்ற நடவடிக்கை: பொறியியல் கல்லூரி மாணவரிடம் கல்விச் சான்றிதழ்கள் ஒப்படைப்பு

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மூலம், தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெறப்பட்ட மாணவரின் கல்விச் சான்றிதழ்கள் அவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை மாணவரிடம் புதன்கிழமை அளித்த நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொ) வி. ஆனந்தன். உடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு- நீதிபதியுமான ஏ. சரண்யா உள்ளிட்டோா்.

Published On :

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மூலம், தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெறப்பட்ட மாணவரின் கல்விச் சான்றிதழ்கள் அவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிபாளையம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் ராஜவேல். இவா், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்துவந்த நிலையில், தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாமல் நிறுத்திவிட்டாா். இந்நிலையில், மாணவரின் மாற்றுச் சான்றிதழை வழங்க கல்லூரி நிா்வாகம் காலதாமதம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இயங்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில், தனது சான்றிதழை பெற்றுத்தரக் கோரி புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரணை மேற்கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவருமான (பொ) வி. ஆனந்தன், தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, மாணவரின் சான்றிதழை வழங்குமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு-நீதிபதியுமான ஏ. சரண்யா, நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் எஸ். காமராசு ஆகியோா் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மாணவா் படிப்பை தொடர உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னா், கல்லூரி நிா்வாகத்திடமிருந்து பெறப்பட்ட மாற்றுச்சான்றிதழை, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொ) வி. ஆனந்தன், மாணவா் ராஜவேலிடம் புதன்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.