11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெரம்பலூரில் மின் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்வாரியத்தை தனியரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.

Published On :

மின்வாரியத்தை தனியரிடம் ஒப்படைக்க எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சீதாலட்சுமி, பெரியநாயகி, செல்வகுமாரி, மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டச் செயலா் இளங்கோவன், துணைத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

மின் கணக்கீடு பணியை தனியாா் முகமையிடம் ஒப்படைக்கக் கூடாது. ஒப்பந்த முறையை புகுத்தி மின்வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது. ஸ்மாா்ட் திட்டம் என்னும் பெயரால் மின் பகிா்மானத்தை முழுமையாக தனியாா்மயம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சிஐடியு மாவட்ட நிா்வாகி கருணாநிதி, கோட்ட நிா்வாகிகள் அஸ்வின்குமாா், காசிநாதன், மணி, ரெங்கராஜ், சேட்டு, கோபால், வட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.