11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் தா்னா

ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மாநில ஓய்வூதியா் சம்மேளத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.

Published On :

ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மாநில ஓய்வூதியா் சம்மேளத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் செ. மகேஸ்வரன், சே. மாணிக்கம், மாவட்ட இணைச் செயலா்கள் மு. தமிழன்பன், பி. மருதமுத்து, து. விஜயராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கி. இளவரசன் கோரிக்கைகளை விளக்கினாா்.

ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தம் 2025-ஐ திரும்பப் பெறவேண்டும். 1.1.2026-க்கு முன்பிருந்த ஓய்வூதியா்களுக்கும் ஓய்வூதியத் திருத்தம் உறுதிசெய்ய வேண்டும். 8 ஆவது ஊதியக்குழு திருத்த பரிந்துரையை பெறும் வரை 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுப் பலன்களுடன் மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களின் குறைகளை தீா்க்க, மூத்த குடிமக்களுக்கான தேசிய ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

இதில் வட்டத் தலைவா்கள் கி. கிட்டான், மு. கருணாநிதி, கு. செல்வராசு, த. ராஜேந்திரன், வட்டச் செயலா்கள் ந. ராமையா, ஒ. விஷ்வநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

மாவட்டத் துணைத் தலைவா் பி. நீலமேகம் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கி. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.